சிவகார்த்திகேயன் படத்தில் களமிறங்கும் அசுரன்.. இது என்ன புது காம்போவா இருக்கு

சிவகார்த்திகேயன் சமீபகாலமாக மற்ற நடிகர்களை போல மாசான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். முதலில் காமெடி படங்களை தேர்வு செய்து நடித்து சிவகார்த்திகேயன், அதில் வெற்றி கண்டதால் அதன் பிறகு நடிப்புக்கு தீனி போடும் வகையில் வேலைக்காரன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் தற்போது வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏலியன் கதையை வைத்து அயலான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கல்லூரியை மையமாக வைத்து உருவாகியுள்ள டான் திரைப்படமும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

தற்போது இந்த 2 படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரேன் நாட்டு மாடல் அழகியை அழைத்து வந்துள்ளனர். டிராவல் ஏஜென்ட் டாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வெளிநாட்டு பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது, பின்பு எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அப்பாவாக அல்லது வில்லனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. தெலுங்கு அசுரன் படத்தின் ரீமேக்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கில் கால்பதித்த உள்ள நிலையில் அடுத்தடுத்து தெலுங்கு நடிகருடன் இணைந்து பல படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவாகும் என்பதற்காகவே இந்த திட்டத்தை கையாண்டு வருவது சிவகார்த்திகேயனின் வட்டத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் முன்னுரிமை கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.