சிவகார்த்திகேயன் என்னதான் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தாலும் காசு விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்த காலகட்டங்களில் சில படங்கள் பைனான்ஸ் ரீதியாக சிக்கிய போது தன்னுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்து அந்த படங்கள் ரிலீஸ் செய்ய உதவியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆனால் அதையெல்லாம் மறந்து விடுகின்றனர். சிவகார்த்திகேயன் சம்பள விஷயத்தில் கறார் காட்டினால் மட்டும் அதை ஊதி பெரிதாக்கி விடுகின்றனர். ஆனால் அது சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே செய்வதுதானாம்.
நான் அவர்களது கஷ்டத்தில் இருக்கும்போது உதவினேன், ஆனால் இப்போது என்னையே பதம் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கம்தான். அந்த மாதிரி ஒரு படப் பஞ்சாயத்து திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களிடம் வந்ததாம்.
சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படம் பைனான்ஸில் சிக்கி கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும் போது தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் சம்பளத்தை விட்டுக் கொடுக்கச் சொல்லி கேட்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் கொஞ்சம் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம்.
ஆனால் அந்த பஞ்சாயத்துக்கு சிவகார்த்திகேயன் வர மறுத்துவிட்டாராம். வந்தால் கண்டிப்பாக தன்னுடைய சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள் என விவரமாக, இல்லை சார் அதை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என கூறி மறுத்து விட்டாராம். இந்த தகவலை திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
