Actor Sivakarthikeyan Soori: சிவகார்த்திகேயன், சூரி போன்ற நடிகர்கள் அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்ததால் பல நடிகர்களின் துன்பங்களில் பங்கேற்று அவர்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்கள். ஆனால் இவருடைய படங்களில் காமெடி பண்ணிய நடிகரை கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே மறந்து விட்டார்கள். இந்த காமெடி நடிகர் நடித்த இரண்டு படமே சிவகார்த்திகேயன் கூட மட்டும் தான்.
அப்படி இருக்கும் பொழுது இவருக்கு ஒரு உதவி என்றால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை இவரிடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார்.
இவரின் மறைவிற்குப் பிறகு இவருடைய குடும்பம் தற்போது நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் அம்மா இருக்கிறார்கள். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களால், வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டில் இருந்து துரத்தி விட்டார்கள். இதனால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் ரோட்டில் இருந்திருக்கிறார்கள்.
சினிமாவில் நடித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கண்ணீருடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னது யார் என்றால் இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இவர்களைத் தான். ஏனென்றால் இவர்களோடு தான் அவர் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
தற்போது இவர்கள் குடும்பம் மதுரையில் தான் இருக்கிறது. இவர்களுக்கு சூரி கண்டிப்பாக ஏதாவது உதவி செய்திருக்கலாம். ஏனென்றால் பவுன்ராஜ் இறப்பிற்கு சூரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தங்களை தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும் பொழுது ஒரு உதவிக்கு கூட முன்வரவில்லை என்பது தான் வருத்தத்தை கொடுக்கிறது.
மேலும் யார் மூலமோ சிறு உதவியை பெற்று ரோட்டில் வண்டி கடையில் இட்லி விற்று குடும்பத்தை பார்த்து வருகிறார்கள். இனிமேல் யாரும் எங்களுக்கு உதவி செய்ய அவசியம் இல்லை என்று தனது மனக்கவலையை கொட்டி தீர்த்து இருக்கிறார்கள். எது எப்படியோ இந்த ஒரு விஷயம் கூட சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு அசிங்கம் தான் என பலரும் பேசி வருகிறார்கள்.