விஜய் பட ரேஞ்சுக்கு வியாபாரத்தை நம்பிய சிவகார்த்திகேயன்.. தவிடு பொடியாகி போன கனவு கோட்டை

Sivakarthikeyan believed in business: சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் நுழைந்த வேகத்தில் அவருடைய கேரியரை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் விஜய், அஜித் ரேஞ்சுக்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து குழந்தைகள் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். அதனாலயே அனைத்து குடும்பங்களிலும் இவரை நம்ம வீட்டுப் பிள்ளையாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.

அந்த அளவிற்கு சிவக்கார்த்திகேயன் தனித்துவமான நடிப்பை கொடுத்து நல்ல பெயர் வாங்கி வந்தார். அதன் காரணமாக விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக நாம் தான் என்று அவருக்குள்ளேயே ஒரு மனக்கோட்டையை கட்டி வந்தார். ஆனால் இப்பொழுது இவருடைய பெயர் மொத்தமும் டேமேஜ் ஆகி லீலைகளின் மன்னனாக ஒவ்வொன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதனால் இவர் கட்டிய கனவு கோட்டை அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இவரைப் பற்றி கேள்விப்பட்டதும் இவருக்கு எதிராக பெண்கள் போர் கொடி தூக்கி வரும் அளவிற்கு உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இமான், சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் தான்.

இதனால் இவருடைய பெயர் டேமேஜ் ஆகுவது மட்டும் அல்லாமல், இவர் நடிக்கும் படங்களுக்கும் மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது. ஏற்கனவே இவர் நடித்த அயலான் படம் நாலு வருட காலமாக இழுவையில் இழுத்தடித்தது. அதை வருகிற தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம் என்ற யோசனையில் இருந்தார்.

ஆனால் அதற்குள் இவர் வாங்கிய கெட்ட பெயரால் அயலான் படத்தின் வியாபாரம் அடிபட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் வசூல் எப்படியும் விஜய், அஜித் படங்களுக்கு கிடைக்கும் லாபம் மாதிரியே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் இருந்தார்.

ஆனால் தற்போது எதிர் மாறாக நிலைமை மாறியதால் இந்த நேரத்தில் அயலான் படத்தை வெளியிட்டால் மொத்தமும் சொதப்பி விடும் என்பதால் படத்தை தள்ளிப் போடலாம் என்ற யோசனையில் இருக்கிறார். ஆக மொத்தத்தில் சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லாமல் தட்டு தடுமாறி கொண்டு வருகிறார்.