சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் மற்றும் லைகா புரோடக்சன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டான் படத்தில் கௌரவ வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல் டான் படமும் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்தது. பல்வேறு காரணங்களால் பிப்ரவரியில் டான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
அதன்பிறகு, டான் படத்தை மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இதனால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்துடன் டான் படம் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டான் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் டான் படத்தை மே 13-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அதிக திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு உள்ளது. இதனால் டான் படத்திற்கு தியேட்டர் பிரச்சினை ஏற்படும் என்பதால் படக்குழு தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஆர்ஆர்ஆர் படத்துடன் டான் படத்தை வெளியிட்டால் டாக்டர் படத்தை போல டான் படம் வசூலை பெற முடியுமா என்பது சந்தேகம்தான். இதனால்தான் சிவகார்த்திகேயன் டான் படத்தை மே மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.