சிவா நீங்க மிஸ்டர் லோக்கல் நாங்க ஹாலிவுட்.. கூப்பிட்டு பெருமைப்படுத்தினா இப்படி ஒரு பஞ்சாயத்தா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடித்த டாக்டர் படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று. வசூல் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அயலான், டான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆர்ஆர்ஆர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பிரம்மாண்டமான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.

ஆர்ஆர்ஆர் படம் பான் இந்தியா படமென்றாலும் கூட, இப்படத்தில் முக்கிய நடிகர்கள் எல்லாம் தெலுங்கு நடிகர்கள் என்பதால் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஆகியோரை இவ்விழாவிற்கு அழைத்திருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசும்பொழுது 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான படங்களின் ஆண்டாக இருக்கும் எனக் கூறினார்.

அத்துடன் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரன், ஜூனியர் என்டிஆர் என இரண்டு சிங்கங்களை ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்றார். இதற்கு பதிலாக ராம் சரணும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசினார். தொகுப்பாளராக இருந்து தற்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாராக கூட ஆகலாம் என புகழ்ந்தார்.

ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷனை விட சிவகார்த்திகேயனுக்கு தான் வேற லெவல் ப்ரோமோ கிடைத்துள்ளது. ஏனென்றால் இந்த விழா யூடியூப் வாயிலாக பல லட்சம் தெலுங்கு ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். அத்துடன் சிவகார்த்திகேயன் தெலுங்கு படங்களில் நேரடியாக நடிக்க உள்ளார். இதனால் தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு முன்பே சிவகார்த்திகேயனுக்கு புரோமோஷன் கிடைத்துள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கடுமையான கோபத்தில் உள்ளார்கள். சினிமாவின் ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் தனுஷ். அதாவது எதிர் நீச்சல் என்ற படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடல் நடனமாடியும் அவரது வெற்றிக்கு தனுஷ் உதவினார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வைத்து படங்கள் தயாரித்தும் அவரது சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்திருந்தாலும் தற்போது இவர்கள் இருவருக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இந்தியளவில்(மிஸ்டர் லோக்கல்) சினிமாவின் ப்ரமோஷனுக்கு பயன்படலாம். ஆனால் எங்க ஆளு நேரடி ஹாலிவுட் மூவியிலேயே நேரடியாக நடிக்கிற ஆளு எனக் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் ஆர்ஆர்ஆர் விழாவில் தனக்கு கிடைத்த சர்ப்பரைஸ் ப்ரமோவை நினைத்து உச்சி குளிர்ந்து இருக்கும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் கடுப்பின் உச்சத்தில் இருப்பதாலும் சிவகார்த்திகேயன் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.