Sivakarthikeyan : இப்போது சிவகார்த்திகேயன் மதராசி மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மிகக்குறுகிய காலத்திலேயே அவரது வளர்ச்சி கோலிவுட் சினிமாவை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
அவ்வாறு சிவகார்த்திகேயன் கேரியரில் மூன்று படங்கள் 100 கோடி தாண்டி வசூல் செய்திருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 330 கோடி வசூலை பெற்றது.
இதற்கு முன்னதாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் டான். இப்படம் 122 கோடி வசூலையும் நெல்சன், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படம் 102 கோடி வசூலையும் அள்ளியது.
100 கோடியை தாண்டிய சிவகார்த்திகேயன் படங்கள்
சிவகார்த்திகேயன் கேயரில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் வேலைக்காரன், மாவீரன், அயலான் ஆகிய படங்கள் தான். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் கிட்டத்தட்ட 77 கோடி வசூலை பெற்றது.
சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு ரசிகர்களை கவர்ந்த படம் ரெமோ. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து 76 கோடி வசூலை பெற்றது. ரஜினி முருகன் படம் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் 59 கோடி வசூலை பெற்று வெற்றி பெற்றது.
சீமராஜா 64 கோடி வசூலை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ஆனாலும் இப்போது அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகமாகியுள்ளதால் அவரது படங்கள் பெரிய வசூல் சாதனை பெரும் என நம்பப்படுகிறது.