குருவை போல சிஷ்யன்.. தனுஷை காப்பி அடிக்கும் SK

சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் சிறப்பாக நடித்த நிலையில், தற்போது படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. என்னதான், சிவகார்த்திகேயன் தனுஷாள் அறிமுகப்படுத்த பட்டிருந்தாலும், தற்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாக தான் உள்ளார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்று தான் சொல்லியாக வேண்டும். 100 கோடி வசூல் கொடுக்க, அத்தனை ஆண்டுகள் தனுஷ் சிரமப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் சிறிது காலத்திலேயே கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து SK23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதுவும் வித்யாசமான ஒரு கதைக்களத்தில் உருவாகும் சீரியஸான படமாக தான் இருக்குமாம்.

தனுஷ் அஸ்திரத்தை கையிலெடுத்த SK

இந்த நிலையில், எப்போதுமே, தனுஷ் ஒரு சீரியஸான படத்தை கொடுத்தாள், அடுத்ததாக கலகலப்பாக பீல் குட் படங்களை கொடுப்பார். தற்போது அதே formula-வை SK பின்பற்றி வருகிறார். SK23 படம் முடிந்த பிறகு, SK24-ல் கலகலப்பான கதையில் நடிக்க போகிறாராம்.

இதை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கிறார். அது ஒரு சீரியசான படமாக தான் இருக்குமாம். இந்நிலையில் ஒரு படம் சீரியஸாகவும் அடுத்ததாக கலகலப்பான கமர்ஷியல் படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளாராம்.

Leave a Comment