மொத்த கடனையும் அடைக்கும் நேரம் வந்தாச்சு.. பெரிய முதலைகள் கையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

டாக்டர் திரைப்படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக உருவாகி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது திரையுலையில் மவுசு கூடியிருக்கிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த திரைப்படம் நிச்சயம் ஹிட் என்ற பெயரும் தற்போது உருவாகி இருக்கிறது.

அதனாலேயே பல முன்னணி நிறுவனங்களும் இவரை வைத்து படம் தயாரிப்பதற்கு போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இவரை வைத்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கு சிவகார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விடுவதாக வாக்கு கொடுத்திருக்கிறதாம்.

கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட கடன் சிக்கல் இருந்து வருகிறது. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது அவர் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்காக தான் அவர் இப்போது ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார். இதை தெரிந்து கொண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளது.

அதாவது சிவகார்த்திகேயனின் கடனை அடைப்பதன் மூலம் அவரை தங்களுடைய வலையில் சன் பிக்சர்ஸ் சிக்க வைத்திருக்கிறது. இது இரண்டு தரப்பிற்கும் லாபமாக இருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனின் கடன் தொல்லையும் தீர்ந்தது.

அதேபோன்று தயாரிப்பு தரப்புக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இதனால்தான் சன் பிக்சர்ஸ் இப்படி ஒரு டீலில் இறங்கி சிவகார்த்திகேயனை மடக்கி போட்டுள்ளது. விரைவில் இந்த கூட்டணியின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.