மரண அடிக்குப்பின் புத்தியை தீட்டி வேலை செஞ்ச சிவகார்த்திகேயன்.. வயிற்றெரிச்சலில் ஹீரோக்கள்

தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி இன்று சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இதற்காக அவர் கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறார். ஒரு நடிகராக, பாடலாசிரியராக, பாடகராக இருக்கும் இவர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இதுதான் அவருடைய கஷ்டத்திற்கு முக்கிய காரணமே. இவரின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஆனால் அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் சிவகார்த்திகேயன் ஒரு வழி ஆகிவிட்டார். படத்தை வெளியிட முடியாமல் அவர் நிறைய கடன் பெற்று தன் தலையை அடமானம் வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டார். பின் ஒருவழியாக படம் வெளியாகி வெற்றியும் பெற்று விட்டது.

இதிலிருந்து அவர் சற்று சுதாரித்துக் கொண்டார். சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க கமிட்டாகும் படங்களில் எல்லாம் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்கிறாராம். அதாவது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தன்னுடைய சொந்தப் பணத்தில் தான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் கண்டிஷன் போடுகிறார்.

இல்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்யும் போது இவரல்லவா மாட்டிக் கொள்வார். அதனால் வந்த சுதாரிப்பு தான் இது. தற்போது இவர் நடித்து வெளியாக இருக்கும் டான் திரைப்படத்திலும் சிவா தான் முதல் தயாரிப்பாளராக இருக்கிறார்.

படத்தை அவர் தயாரித்து பிறகு லைக்காவிடம் கொடுப்பதுதான் போட்ட அக்ரிமென்ட். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடி. அதில் சிவாவின் சம்பளம் 25 கோடி. எப்படி பார்த்தாலும் படம் 50 கோடிக்கு மேல் லாபம் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

இதனால் இந்த திரைப்படம் பட்ஜெட்டுக்கு மேல் எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அதில் சிவாவுக்கு ஒரு முக்கிய ஷேர் கண்டிப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது மிகப்பெரிய ப்ரொடக்ஷன் கம்பெனிகளுக்கு படம் நடிக்க கமிட்டாகி வருகிறார். இதையெல்லாம் பார்த்து தற்போது மற்ற நடிகர்கள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.