பிசினஸ் ஆகாமல் 6 வருடங்களாக முடங்கி கிடந்த படம்.. டபுள் ட்ரீட் கொடுக்க போகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் கமலின் தயாரிப்பில் சாய்பல்லவியுடன் இவர் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடித்து ஆறு வருடங்களாக கிடப்பில் கிடந்த திரைப்படம் ஒன்று தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதாவது ஆர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அயலான் திரைப்படம் பல பிரச்சினைகளின் காரணமாக பிசினஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது.

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படி பல விஷயங்கள் இருந்ததாலேயே இப்படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

ஆனால் பல சிக்கல்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இப்படத்தை பலரும் மறந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இப்படம் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு வரும் நவம்பர் மாதம் தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது. இது சிவகார்த்திகேயனின் ரசிகர்களை தற்போது குஷிப்படுத்தி இருக்கிறது.

ஆனால் இதற்கு முன்பே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 11 ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த வருடம் சிவகார்த்திகேயன் இதன் மூலம் டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கிறார்.

கடந்த வருடமும் இதே போன்று டான், பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது. அதில் டான் வசூல் வேட்டை நடத்திய அளவுக்கு பிரின்ஸ் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இந்த வருடம் வெளியாக இருக்கும் இரு படங்களுமே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரியும் என சிவகார்த்திகேயன் நம்பிக்கையோடு இருக்கிறார். அந்த அளவுக்கு இரண்டு படங்களின் கதைக்களமும் தாறுமாறாக இருக்குமாம். அதற்காகவே ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.