Maamanan: உதயநிதி சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் கடைசி படமான மாமன்னன் படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்நிலையில் மாமன்னன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது. அதன்படி தற்போது 50 கோடியை தாண்டி வசூல் செய்து விட்டது.
இந்நிலையில் மாமன்னன் வசூலை ஏற்றுவதற்காக உதயநிதி பக்காவாக பிளான் போட்டுள்ளார். அதாவது கடந்த சில வாரங்களாகவே நிறைய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தது. ஆனால் மாமன்னன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 15 நாட்கள் எந்த படமுமே வெளியிடக் கூடாது என்று பிளான் செய்துள்ளார்.
ஆகையால் இந்த வாரமும் மாமன்னன் படம் தான் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதுவரவாக எந்த படமும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனென்றால் விநியோகஸ்தராக பட்டையை கிளப்பி வரும் உதயநிதி நினைத்தால் மட்டுமே தற்போது படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாமன்னன் ரிலீசுக்கு பிறகு அடுத்த வாரம் ஜூலை 14ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் தான் வெளியாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் மாமன்னன் படத்தின் மூலம் பல கோடி லாபத்தை அள்ளிவிடலாம். அதுமட்டும்இன்றி உதயநிதி நினைத்தது போலவே வசூலும் வாரி குவிந்து வருகிறது.
இந்நிலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் ரிலீசுக்கு பிறகு மாமன்னன் வசூல் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சிவகார்த்திகேயனால் மாமன்னன் வசூல் தவிடுபொடி ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாவீரன் ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது படம் நன்றாக தான் இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.