ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகும் சிவகார்த்திகேயன்.. திடீர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்

சினிமாவில் தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி இடத்தை பிடித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதிலும் குறுகிய காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடித்திருப்பது முன்னணி நடிகர்களையே கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடி வரை வசூலித்து அவரை ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாற்றியது.

அதனாலேயே அவர் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பிரின்ஸ் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சி தான். அதுவும் அப்படம் பார்க்கும் ரகமாக இருந்தும் கூட படு மொக்கை என்ற ரேஞ்சுக்கு கருத்துக்கள் பரவியது.

உண்மையில் சிவகார்த்திகேயனின் இந்த திடீர் வளர்ச்சிதான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டாப் ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பேசியதும் ஒரு முக்கிய காரணம். ஆனால் சிவகார்த்திகேயன் எப்போதும் தன்னுடைய வேலையை மட்டுமே செய்து வருகிறார். ஒருமுறை கூட அடுத்தவரின் இடத்தை பிடிக்கிறேன் என்ற ரீதியில் அவர் நடந்து கொண்டதே கிடையாது.

அப்படி இருந்தும் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் சோசியல் மீடியாக்களில் அதிகம் பரவி வருகிறது. மேலும் பிரின்ஸ் பட தோல்வி தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், இயக்குனருக்கும் அவருக்கும் தகராறு என்றும் வதந்திகள் பரவியது. உண்மையில் மாவீரன் பட சூட்டிங் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் ஷூட்டிங்கில் தகராறு, சிவகார்த்திகேயன் ஓவர் அடாவடி செய்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் அதிகம் பரவி வருகிறது. இதெல்லாம் அவருடைய வளர்ச்சியை குறைப்பதற்காக பக்காவாக போடப்பட்ட திட்டம் தான். இப்படிப்பட்ட வேலைகளை கண்ணுக்குத் தெரியாத ஆன்லைன் மாஃபியாக்கள் பயங்கர திட்டம் போட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

எங்கே அவர் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விடுவாரோ என்ற வயிற்றெரிச்சலும், புகைச்சலும் தான் இந்த அவதூறுகளுக்கு காரணம். இந்த அளவுக்கு வன்மத்தை சிவகார்த்திகேயன் மேல் காட்டும் அந்த விஷமிகள் யார் என்பதுதான் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.