சிவகார்த்திகேயன் தலையில் இடியை இறக்கிய இயக்குனர்.. இதுக்கு மேல கடனுக்கு வட்டி கொடுத்த பாடி தாங்காது

Actor Sivakarthikeyan: சினிமாவிற்கு சிவகார்த்திகேயன் என்டரி கொடுத்ததில் இருந்து அவருக்கு ஏறுமுகமாகத்தான் அவருடைய படங்கள் வெற்றி பெற்று வருகிறது. இதில் ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இவருக்காக ரசிகர்கள் பார்த்து வருவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாவீரன் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் போகப்போக ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறிவிட்டது.

இதனை தொடர்ந்து இவருடைய அயலான் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் இதில் மறுபடியும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் வரை இப்படத்தின் சிஜி வேலைகள் முடியாததால் தீபாவளி அன்று ரிலீஸ் பண்ண முடியாது என்று படக்குழு முடிவு எடுத்திருக்கிறார்கள்.

இதனால் சிவகார்த்திகேயன் தலையில் இடியை இறக்கிது போல் இந்த ஒரு விஷயம் இருக்கிறது. அதற்கு காரணம் ஏற்கனவே நிறைய கடன் பிரச்சனை இருப்பதால் அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் திரையரங்குகளில் வராமல் இழுத்தடிப்பது மக்களின் சுவாரசியத்தை குறைக்கும் விதமாக இருக்கிறது.

ஏற்கனவே இப்படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகியிருக்கிறது. பொதுவாகவே  எந்த ஒரு படங்களும் ரொம்ப நாள் இழுத்தடித்தால் அது மக்களிடம் பெரிய அளவிற்கு ரீச் ஆகாது. அந்த வகையில் இப்படம் எந்த மாதிரியான வரவேற்பு கொடுக்கப் போகும் என்பது சிவகார்த்திகேயனின் நடிப்பை பொறுத்து தான் அமையும்.

அந்த வகையில் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் வசூல் அளவிலும் ரொம்பவே அடிபட்டு விடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் இதுக்கு மேலையும் கடனுக்கு மேல் கடன் வாங்கவே முடியாது. இதனால் ஒரேடியாக துவண்டு போவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் எப்படியாவது இப்படத்தை இந்த வருடத்தில் ரிலீஸ் பண்ணி லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முடிவில் இருக்கிறார். மறுபக்கம் படக்குழுவு தயாரிப்பில் இருந்து இப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். மேலும் இப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று கூடிய விரைவில் தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார்கள்.