சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கும் படம் பிரின்ஸ். இந்த படம் தற்போது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. காமெடி என்ற பெயரில் படத்தை வீணடித்து விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரின்ஸ் படத்திற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். அதாவது 2018 ஆம் ஆண்டு இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு சில காரணங்களினால் தடைபட்டு வந்தது.
கடந்த ஆண்டு படத்தின் சூட்டிங் அனைத்தையும் முடித்து விட்டனர். தற்போது அயலான் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருக்கிறதாம். இந்த வேலைக்கு இன்னும் பல கோடிகள் தேவைப்படுகிறதாம். ஏற்கனவே அயலான் படத்திற்கு பல கோடிகள் செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் ராஜேஷ்.
இதனால் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் வேண்டுமென்றால் சிவகார்த்திகேயனை எனக்கு அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க சொல்லுங்கள் நான் இந்த படத்தை முடித்து தருகிறேன் என்று ஒரு கோரிக்கையும் வைத்துள்ளாராம்.
ஆனால் சிவகார்த்திகேயன் இந்தக் கோரிக்கைக்கு ஏற்று கொள்வதாக தெரிவதில்லை. ஏனென்றால் எனக்கு ஏற்கனவே நிறைய கடன் இருக்கிறது என்று தற்போது ராஜேஷ்க்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம். இதனால் இப்போதைக்கு அயலான் படம் வெளியாகாது என்பது இதன் மூலம் உறுதியாக தெரிகிறது.
மேலும் பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷனில் கூட அயலான் படம் அடுத்த ஆண்டு கோடைக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை அம்சம் கொண்ட படம் வெளியானது இல்லை என்று ஆகா ஓகோ என்ற பேசியிருந்தார். ஆனால் தற்போது இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.