சிவகார்த்திகேயன் செய்யும் சில வேலைகள் பார்ப்பவர்களை கடுப்பேத்துவது போல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர். அதிலும் ப்ளூசட்டை மாறன் போன்றவர்கள் சிவகார்த்திகேயனை பொளந்து கட்டி வருகிறார்கள்.
வழக்கமாக நல்ல திரைப்படங்கள் வெளிவரும் பொழுது படம் நன்றாக இருந்தால் சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அந்த படக் குழுவை கூப்பிட்டு பாராட்டுவார்கள். அவர்களின் பாராட்டு அந்தப் படத்திற்கும் விளம்பரமாக அமையும்.
ஆனால் சிவகார்த்திகேயன் படத்திற்கே தற்பொழுது விளம்பரம் தேவைப்படும் பொழுது, அவர் மற்ற படக்குழுவை தனது அலுவலகத்திற்கு கூப்பிட்டு பாராட்டுவதும். யாரும் கூப்பிடவில்லை என்றால் அவரே சென்று பாராட்டி வருவதும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
தற்பொழுதுதான் ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழுவை கூப்பிட்டு பாராட்டினார் ஆனால் அதில் நடிகர் சசிகுமார் கலந்து கொள்ளவில்லை. தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் பூஜை நடந்தது. அங்கு சென்ற சிவகார்த்திகேயன், அவர்களையும் கூப்பிட்டு ஒரு போட்டோ எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் சிவகார்த்திகேயனின் படம் இந்த வருடம் வெளிவருவது ரொம்ப கஷ்டமாம். அப்படியே ஒரு வருடம் இடைவெளி விட்டால் மக்கள் தன்னை மறந்தே விடுவார்கள் என்று இப்படி குறுக்க மறுக்க வந்து செல்கிறார்.
ஒரு பத்து வருடங்கள் நல்ல படங்களில் நடித்து, அதற்கு பின் செய்ய வேண்டிய வேலைகளை தற்போது சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். அப்படியெல்லாம் செய்வதால் ரஜினி, கமல் போன்று ஆகலாம் என்று அவர் கூடவே இருக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் யாராவது சொல்லி இருப்பார்கள் போல.