தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் இவ்வளவு பெரிய நடிகராக மாற முடியுமா என யோசிக்கும் காலகட்டங்கள் மாறி தொலைக்காட்சியில் இருந்தாலும் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை தொட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனுக்கு பிறகு தான் பலருக்கும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வது கனவாகவே மாறியது. ஆனா விதை சிவகார்த்திகேயன் போட்டது. அதற்கு முன்னர் காமெடியனாக பல நடிகர்கள் வந்திருந்தாலும் ஹீரோவாக உச்சத்தை அடைந்தது இவர்தான்.
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருக்கும்போதே ஆர்த்தி என்ற சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுப் போட வந்த போது அவரது மனைவி ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. முதலில் பொண்ணு என்பதால் இரண்டாவது கண்டிப்பாக என்னுடைய அப்பாதான் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி வந்தாராம் சிவகார்த்திகேயன்.
அதுபோலவே இன்று சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து, 18 வருடம் கழித்து என்னுடைய அப்பா மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்து விட்டார் என தன்னுடைய தந்தையை ஞாபகப்படுத்தி கொண்டார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் தாயும் குழந்தை நலம் எனவும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.