வில்லனுக்காக கெஞ்சும் சிவகார்த்திகேயன்.. 100 கோடி வசூலால் வந்த பேராசை

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அதனால் சிவகார்த்திகேயன் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மற்ற நடிகர்களை போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதை விட தனக்கு பொருந்தக்கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து அதில் கச்சிதமாக நடித்து வருகிறார்.

இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சீமராஜா மற்றும் ஹீரோ போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் ரசிகர்கள் சிவகார்த்திகேயனிடம் எதிர்பார்ப்பது காமெடி கலந்த கதையை மட்டும் தான். அதனை சரியாக புரிந்து கொண்டு தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது டான் படத்தில் காலேஜ் மாணவனாக நடித்துள்ளார். இந்த படமும் காமெடி கலந்த கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இதற்கு அடுத்து சிங்கப் பாதை படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதற்கு படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடித்த தான் காரணம் என கூறி வருகின்றனர்.

அதாவது டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு எந்த அளவிற்கு பாராட்டப்பட்டது. அதே அளவிற்கு வில்லனாக நடித்த வினையின் கதாபாத்திரத்திற்கும் பாராட்டு கிடைத்தது. டாக்டர் படத்தில் வினை வில்லனாக நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம். ஏனென்றால் படக்குழுவினரிடம் வினை வில்லனாக நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறதா கேளுங்கள் என சிவகார்த்திகேயன் நெல்சன் இடம் கூறியதாக சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறினார்.

அதனால் சிங்கப்பாதை படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல நடிகர்களிடமும் சிவகார்த்திகேயன் மற்றும் பட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதலில் ஆதியிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஆதி அதற்கு பெரிதளவு சம்மதிக்கவில்லை. அதன் பிறகு பிருத்விராஜுடன் கேட்டுள்ளனர். பிரித்திவிராஜ் மலையாளத்தில் தற்போது ஹீரோவாக நடித்து வருவதால் அவரும் சம்மதிக்கவில்லை.

அதனால் சிவகார்த்திகேயன் தற்போது ஹிந்தியில் உள்ள ஒரு பிரபல நடிகரை தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் சம்மதித்து விட்டால் இந்தப் படமும் இரண்டு நடிகர்கள் நடிப்பதால் கண்டிப்பாக 100 கோடிக்கு மேல் வசூல் பெரும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.