புறநானூருக்கு சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம்.. ஜெயம் ரவி காட்டில் கொட்டும் பேய் மழை

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படம் 90% முடிந்துவிட்டது. அடுத்ததாக சிவகார்த்திகேயன், சுதா கொங்கராவின் புறநானூறு படத்திற்கு செல்ல இருக்கிறார். வெங்கட்பிரபுவுடன் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி உடன் ஒரு படம் என சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த பிராஜெக்டுகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிசியாக உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் காரணத்தால். அவரது படங்கள் நல்ல வியாபாரம் ஆகி வருகிறது. சமீபத்தில் வெளியான அமரன் படம் 360 கோடிகளை வசூலித்தது, இதனால் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் என அனைத்து இடங்களிலும் எஸ்.கே தூள் கிளப்புகிறார்.

அமரன் படத்திற்கு தமிழ்நாட்டின் ஷேர் மட்டும் 70 கோடிகள் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் புறநானூறு படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளமாக 75 கோடிகள் பேசப்பட்டது ஆனால் அதன் பிறகு இந்த படத்தின் ரெவென்யு லாபத்தை வைத்து இப்பொழுது, பங்கு என பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது

சுதா கொங்காரா இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பியில் எடுத்து கொடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிவாவிற்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அவருக்கு சம்பளமாக எட்டு கோடிகள் பேசப்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து கோடிகள் கொடுத்தாலும் அவருக்கும் ரெவென்யு ஷேர் அடிப்படையில் கொடுக்கப் போகிறார்களாம்.

புறநானூறு படத்திற்கு மொத்தமாக 162 கோடிகள் பட்ஜெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் தனித்தனியாக சம்பளம் என்று பார்க்காமல், மொத்தமாய் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் சதவீத பங்குகளை பிரித்துக் கொள்கிறார்கள்.

Leave a Comment