Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான் மற்றும் மாவீரன் படங்கள் உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதேபோல் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. ஆனால் அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்தது.
இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சருக்களாக அமைந்தது. ஆகையால் இப்போது அவரது மார்க்கெட் மந்தமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவீரன் படத்தின் தமிழ்நாட்டு விநியோகம் யார் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் உதயநிதியை நாடி தஞ்சமடைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாவீரன் படத்தையும் ரெட் ஜெயின்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 12 கோடியில் இருந்து 15 கோடி வரை பேசி முடித்துள்ளனர். மேலும் இதில் சிவகார்த்திகேயன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.
அதாவது படத்தின் வசூலில் 50 சதவீத ஷேர் ரஜினி படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு சேரும். அதேபோல் இப்போது சிவகார்த்திகேயனும் மாவீரன் லாபத்தில் தனக்கு 50 சதவீத ஷேர் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். படத்தின் டைட்டில் தான் ரஜினியை ஃபாலோ பண்ணுகிறார் என்றால் அவரது பாலிசியையும் அப்படியே பின்பற்றுகிறார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் படம் எப்படியும் 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்துள்ளார். இப்போது பின்னணி வேலைகள் முமரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் ட்ரெய்லர் ரிலீஸாக இருக்கிறது.