தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னணி நடிகர் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக டாக்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி டாக்டர் படத்தின் டிரைலரை ரசிகர்கள் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக மார்ச் 26ஆம் தேதி டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்து போஸ்டரையும் வெளியிட்டனர்.
ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் டாக்டர் படம் எதிர்பார்த்த வசூலை பெறாது என ரிலீஸ் தேதியை மே மாதம் ரம்ஜான் விடுமுறையில் டாக்டர் படம் வெளியாக உள்ளது. இதனால் ஏற்கனவே டாக்டர் படத்தின் ட்ரெய்லர் ரெடியாகி விட்டதாம்.
இதைப்பார்த்த பிரபலம் ஒருவர் சமீபத்தில் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். டாக்டர் படத்தின் டிரெய்லரில் ஒரு குறிப்பிட்ட நடிகரை நாசுக்காக சிவகார்த்திகேயன் கிண்டலடித்துள்ளாராம்.
கடந்த சில வருடங்களாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் போற போக்கில் அவரை ட்ரெய்லரில் ஒரு வசனத்தின் மூலம் கலாய்த்து விட்டாராம். கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் டாக்டர் டிரெய்லர் வெளியானால் கண்டிப்பாக இருதரப்பு ரசிகர்களுக்கும் கைகலப்பு வர வாய்ப்பிருக்கிறது என அந்த பிரபலம் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
