உதயநிதியை பகடை காயாய் பயன்படுத்தும் சிவகார்த்திகேயன்.. நரியை மிஞ்சிய தந்திரம்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வெற்றி, தோல்வி என மாறி மாறி படங்களை கொடுத்து வருகிறார். ஒரு படம் ஃபிளாப் என்றால் அடுத்த படம் வெற்றி கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு அயலான் மற்றும் மாவீரன் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த காலத்தில் இருந்து தற்போது வரை அவர் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவது கடன் தான். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சில படங்களை தயாரித்து நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்பு தயாரிப்பை கைவிட்டு விட்டு ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

என்ன தான் சிவகார்த்திகேயன் 40 கோடி சம்பளம் வாங்கினாலும் அவரது கடன் தற்போது வரை அடைத்த பாடு இல்லை. அவரது படங்களும் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவரை நச்சரிக்க தொடங்கிவிட்டனர். அப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திருந்தால் சிவகார்த்திகேயன் மொத்த கடனையும் அடைத்து இருக்கலாம்.

ஆனால் தற்போது வரை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதன் காரணமாக கடன் கொடுத்தவர்கள் இப்போது மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் நரியை விட படு பயங்கரமாக தந்திரம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதாவது மாவீரன் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் கைவசம் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களை இந்நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. உதயநிதியை மீறி எந்த படங்களையும் வெளியிட முடியாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆகையால் சிவகார்த்திகேயன் உதயநிதியை நம்பி மாவீரன் படத்தை கொடுத்திருக்கிறார். எனவே கண்டிப்பாக இந்த படத்தின் ரிலீஸில் எந்த பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையில் உள்ளார். மேலும் உதயநிதி மாவீரன் படத்தை ரிலீஸ் செய்வதால் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.