அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து அவர் மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி அவர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதால் தான் தனக்கு இருந்த கடன் நெருக்கடியை ஓரளவுக்காவது சமாளித்து வருகிறாராம். கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயன் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறார்.
அவருடைய நடிப்பில் வெளிவந்த சீம ராஜா, வேலைக்காரன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் படத்தை தயாரித்த ஆர்டி ராஜாவுக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனின் வலது கையாக இருந்து செயல்பட்டவர் தான் இவர்.
அதனாலேயே சிவகார்த்திகேயன் இந்த படங்களுக்கான பைனான்சையும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு கலெக்சன் பெறாததால் மொத்த கடன் சுமையும் சிவகார்த்திகேயன் தலையில் விழுந்தது. இதனால் அவர் மிகப்பெரிய கடனாளி ஆனார். அதை அடைப்பதற்காக தான் அவர் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
அதில் இன்னமும் இந்த கடன் அவர் கழுத்தை நெரித்து கொண்டிருக்கிறதாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் பட ரிலீசில் கூட ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போது பைனான்சியர்கள் அனைவரும் இணைந்து ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் 33 சதவீதம் கடன் தொகையாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டனர். அதற்கு சம்மதித்த சிவகார்த்திகேயனும் கையெழுத்திட்டு ஒரு வழியாக பிரச்சனையை முடித்து வைத்தார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக கடன் தொகையை கொடுத்து தீர்த்துக் கொண்டே வந்தார். அதில் இன்னும் 57 கோடி பாக்கி இருக்கிறதாம். அதை கூடிய விரைவில் கொடுத்து அடைத்து விடத்தான் சிவகார்த்திகேயன் இப்போது பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாராம்.