வாய்ப்பு கொடுத்தவருக்கு ஆப்படித்த குடும்பம்.. பகிரங்கமாக அசிங்கப்படுத்திய சிவகுமார்

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமாக இருப்பவர்கள் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர். சிவக்குமாரில் தொடங்கி அவருடைய இரண்டு மகன்கள், மருமகள் என்று அனைவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள்.

அதில் சிவக்குமாரின் மகன் கார்த்தி பருத்திவீரன் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இயக்குனர் அமீர் இயக்கிய அந்த திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கிராமத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கார்த்தி ஒரு முரட்டு கிராமத்து இளைஞனாக நடித்திருப்பார். மேலும் இந்தப் படத்தில் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கார்த்தி பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றார்.

அவருக்கு இவ்வளவு பெரிய பேரும், புகழும் கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் அமீர். அவர் இந்த படத்திற்காக மூன்று வருடகாலம் கடுமையாக கஷ்டப்பட்டு கார்த்தியை உருவாக்கினார். அதன் பிறகு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த சமயத்தில் நடிகர் சிவகுமார் அளித்த ஒரு பேட்டியில் நாங்கள் என்ன அமீருக்கு அடிமையா என்றெல்லாம் அவரை மிக மோசமாக வசை பாடினார். அப்பொழுதுதான் சிவகுமாரின் குடும்பத்திற்கும் அவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.

அது என்னவென்றால் அமீர் இந்த படத்தை வெளியிடுவதற்காக சில ஏரியாக்களில் உரிமைகளை வாங்கியிருந்தார். அதில் ஏற்பட்ட சில குழப்பங்கள் தான் சிவகுமார் குடும்பத்துடன் உண்டான பிரச்சினைக்கு மிகப்பெரிய காரணமாக சொல்லப்பட்டது. இதனால் சிவகுமார், அமீர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். தற்போது கார்த்தி, அமீர் கூட்டணி இணையாமல் இருப்பதற்கு இதுதான் காரணமாக உள்ளது.