சமீபத்தில் பல கோடிகள் சம்பளத்தை உயர்த்திய 6 ஹீரோயின்கள்.. அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் பேராசைப்படும் நடிகை

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டதால் தற்போது தங்களது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வரும் ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம். முக்கியமாக தனுஷ், அஜித்துக்கு ஜோடி போட்டதால் பேராசையில் இரண்டு கோடியில் இருந்து நான்கு கோடி சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் 44 வயது நடிகை.

ராஷ்மிகா மந்தனா: இவர் 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த இந்தப் படம் அதிக அளவில் வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் இவருடைய நடிப்பு பல விமர்சகர்களிடமிருந்து பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். தமிழில் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றதால் இப்பொழுது இவர் சம்பளத்தை இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக கேட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: இவர் தமிழில் அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமானார். பின்பு தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், வட சென்னை, சாமி, கனா படங்களில் நடித்து ஒரு நடிகைக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு முன்னணி நடிகையாக வந்து விட்டோம் என்று நினைத்திருக்கிறார். இதனால் இந்த அம்மணி இதுவரை லட்சங்களில் வாங்கிட்டு இருந்த சம்பளத்தை இப்பொழுது கோடிக்கு மாற்றி விட்டார்.

பிரியா பவானி சங்கர்: இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து நடிகைக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டார். இப்பொழுது இவர் கையில் வரிசையாக படங்களை வைத்திருப்பதால் இவருடைய சம்பளத்தை 1.5கோடிக்கு அதிகரித்து விட்டாராம்.

நித்தியா மேனன்: இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் படங்களில் நடித்து மிகவும் ஒரு வெற்றி ஹீரோயினாக மாறிவிட்டார். இவர் படங்களில் வந்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற நிலைமைக்கு இவர் ஆகிவிட்டார். அதனால் என்னவோ இவருடைய சம்பளத்தை இப்பொழுது 2.5 கோடிக்கு உயர்த்தி உள்ளார்.

திரிஷா: புதுசாக முளைத்த நடிகைகள் கோடியில் பணம் கேட்டு டிமாண்ட் செய்யும் பொழுது இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனால் இவரும் இவர் பங்கிற்கு சம்பளத்தை அதிகமாக கேட்டு தயாரிப்பாளர்களுக்கு செக் வைத்து விட்டார். அஜித், தனுஷ் கூட ஒரு படத்துல ஜோடியாக நடித்துவிட்டு சம்பளத்தை கோடிக்கு உயர்த்திய நடிகைகளுக்கு மத்தியில் இவரும் இவருடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

மஞ்சு வாரியர்: இவர் முதன் முதலில் மலையாளத்தில் 1995ஆம் ஆண்டு நடிப்பிற்குள் நுழைந்தார். தொடர்ந்து இவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றார். பின்பு தமிழில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். இப்பொழுது மஞ்சு வாரியர் அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் இவருடைய சம்பளம் இரண்டு கோடியிலிருந்து நான்கு கோடியை உயர்த்தி விட்டாராம். நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் இல்லையென்றால் கெட் அவுட் என்று சொல்லி வருகிறார்.