குடிப்பழக்கத்தால் துரத்தி விட்ட சன் டிவி.. காதலால் மீண்டும் விஜய் டிவியில் விட்டதை பிடித்த பிரபலம்

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் அவர். பெண்கள் முதல் குழந்தைகள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் நடிகராக கலக்கி வருகிறார்.

அவர் இவ்வளவு பிரபலம் ஆவதற்கு முன் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு அதிர்ச்சி ஊட்டும் விதத்தில் இருந்துள்ளது. அதாவது மீடியாவுக்கு வருவதற்கு முன் இவர் பிரபல தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடி அலைந்து உள்ளார்.

அந்த சமயத்தில் பிரபல தொலைக்காட்சியின் பாட்டு சேனல் ஒன்றில் இவருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் வாய்ப்பு தேடும் சமயத்தில்தான் அவருடைய நெருங்கிய தோழியும் மீடியாவில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். அவருக்கு கிடைத்த வாய்ப்பு போல் அந்த தோழிக்கு கிடைக்கவில்லை.

இதனால் அந்த சேனல் டெக்னிக்கல் டீமில் அவரின் தோழி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் வளர்ந்து வந்த சமயத்தில் நடிகருக்கு வேறு சில பழக்கங்களும் இருந்து வந்துள்ளது.

நடிகர் சதா நேரமும் குடியிலே காலத்தை கழித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமயத்தில் கூட அவர் குடித்துவிட்டு தான் வருவாராம். இதனால் அந்த பிரபல சேனல் நடிகரை வெளியேற்றியுள்ளது. அதன் பிறகு நடிகர் தற்போது பிரபலமாக இருக்கும் மற்றொரு சின்னத்திரை சேனலில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அங்கு தொகுப்பாளர், சீரியலில் ஹீரோ என்று பயங்கர பிரபலமானார். இதற்கிடையே தான் காதலித்த தன் தோழியை படு விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கம், பெண்கள் விஷயம் என்று தடுமாறி போயிருந்த அந்த நடிகரை காதல் மனைவி திருத்தி அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்து உள்ளார்.

மனைவி வந்த நேரம் நடிகருக்கு அந்த சேனலின் பாப்புலர் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த நடிகர் தற்போது மனைவி, குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.