புது இயக்குனர்களை நேரில் அழைத்து ஆசி வழங்கும் ஸ்ரீ திடீர் தளபதி சுவாமி.. SK- வை கலாய்த்த பிரபலம்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சமீப காலமாக சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். மதராஸி, பராசக்தி என அவருடைய அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இதற்கிடையில் கேரளா முதல்வரை சந்தித்ததில் தொடங்கி கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது வரை புகைப்படங்கள் வெளியானது. அதில் தற்போது மற்றொரு போட்டோ வந்துள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் மற்றும் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில் ப்ளூ சட்டை மாறன் அதை பங்கம் செய்துள்ளார்.

SK- வை கலாய்த்த பிரபலம்

எப்போதுமே இவர் சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என்றுதான் கிண்டல் அடிப்பார். அதில் தற்போது தலைவர் பாணியில் புது இயக்குனர்களை நேரில் அழைத்து ஆசி வழங்கிய ஸ்ரீ திடீர் தளபதி சுவாமிகள் என கிண்டல் அடித்துள்ளார்.

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் இவர்களை பாராட்டி வருகின்றனர்.

அதில் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியதை தான் ப்ளூ சட்டை மாறன் நாசுக்காக குத்தி காட்டியுள்ளார். ஏனென்றால் ரஜினி இப்படித்தான் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார்.

அதையே சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்துள்ளார். அடுத்த விஜய் என்பதை தாண்டி அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக முடிவு செய்துவிட்டாரோ என்னவோ.