கைதி ஹிந்தியில் செய்த முக்கிய மாற்றம்.. படம் விளங்குன மாதிரிதான்!

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. மேலும் கார்த்தியின் சினிமா கேரியரில் முதல் 100 கோடி வசூல் செய்த படமாகவும் அமைந்தது.

இத்தனைக்கும் மிகப்பெரிய நடிகரான விஜய் பிகில் படத்துடன் போட்டி போட்டு இத்தகைய சாதனையை செய்தது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் படத்தின் கதையும் திரைக்கதையும் தான்.

ரசிகர்களும் கொடுத்த காசுக்கு படம் திருப்தியாக இருப்பதாக கூறி விமர்சனங்களை கொடுத்து வந்தனர். கைதி வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் கைதி ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கின.

அதில் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் தயாரித்து எஸ்ஆர் பிரபு தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

எப்போதுமே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு படம் ரீமேக் ஆகும் போது அந்த மொழிக்கு ஏற்றவாறு சிலர் மாற்றங்களைச் செய்வார்கள். ஆனால் கைதி படத்தில் மாற்றங்கள் செய்வதற்கான வேலையே இல்லை.

அதையும் மீறி ஹிந்தி ரீமேக்கில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளனர். கார்த்தி கைதி படத்தில் தன்னுடைய மனைவி இறந்த பிளாஷ்பேக் காட்சியை சில வசனங்களில் கூறி முடித்துவிடுவார். ஆனால் ஹிந்தியில் மனைவி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க உள்ளார்களாம். மேலும் அவர் பேசிய வசனத்தை சில நிமிட காட்சிகளாகவே வைத்து விடலாம் எனவும் முடிவு செய்துள்ளனராம். இது தேவையில்லாமல் படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என்பதே கருத்தாக உள்ளது.

kaidhi-hindi-remake-ajay-devgan
kaidhi-hindi-remake-ajay-devgan