சிவகார்த்திகேயன், தனுஷ் ஹிட் லிஸ்டில் சேர்ந்த சூரி.. கருடனாக புதிய அவதாரம் ஜெயிக்குமா?

Actor Soori: ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் அவருடைய வெற்றியை யாராலையும் தடுக்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப சூரியின் ஆட்டம் வேற லெவலுக்கு மாறிவிட்டது. அதாவது விடுதலைப் படத்தில் எதர்ச்சியாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை தனக்கு ஏற்ற மாதிரி மாற்றி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.

அத்துடன் பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் வெட்டுக்காளி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எப்படியும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக வெற்றி அடைந்து விடும்.

Also read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

அதற்கேற்ற மாதிரி மக்கள் சப்போர்ட்டுடன் சூரியும் இணைந்திருக்கிறார் என்றால் அந்த படம் வெற்றிவாகை சூடப்போவது உறுதியானது. இதனை தொடர்ந்து அடுத்து இன்னொரு படத்திலும் கதாநாயகனாக கமிட்டாய் இருக்கிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜை போட்டு துவங்க இருக்கிறது.

மேலும் இப்படத்திற்கு “கருடன்” என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் உருவாக்கப் போகிறார். அடுத்ததாக துரை செந்தில் குமார் இயக்குனராக பணிபுரிகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை கொடுத்தவர்.

Also read: கணவன் இறப்பு, நடுத்தெருவுக்கு வந்த காமெடி நடிகரின் குடும்பம்.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன், சூரி

எப்படி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்ததோ, அதேபோல் சூரிக்கும் இப்படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இந்த இயக்குனர் லிஸ்டில் சூரியும் கூட்டணி வைத்து இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இவருக்கு ஏற்ற மாதிரி ஹீரோயினை தேர்ந்தெடுக்கும் படலமும் தொடர்ந்து கொண்டு வருகிறது. அத்துடன் படத்திற்கு தேவையான தோற்றத்தை சூரி தற்போது மாற்றிக் கொண்டு வருகிறார்.

Also read: சீரியஸ் கேரக்டரில் அசத்திய 5 காமெடியன்ஸ்.. ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த சூரி