சிம்புவின் படங்கள் தொடர் தோல்வியை கொடுத்து வந்த நிலையில் மாநாடு படத்திற்கு பிறகு தான் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி சம்பளத்தையும் அதிகமாக உயர்த்தி உள்ளார். இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ ஸ்கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிப்பு உள்ளார். மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியிடப்பட்டது.
அதன்படி மார்ச் 30 பத்து தல படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த சூழலில் வெற்றிமாறனின் விடுதலை படம் பல வருடங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வந்தது. சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வனப்பகுதியை சுற்றி நடைபெற்றது.
சமீபத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், மற்ற வேலைகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்திருந்தனர். இப்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதாவது விடுதலை படம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது. ஆகையால் சிம்பு படத்திற்கு போட்டியாக சூரி படம் மோத இருக்கிறது.
இதுவரை காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி முதல் முறையாக கதாநாயகனாக விடுதலை படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் சிம்புக்கு போட்டியாக சூரியை இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் வெற்றிமாறன். ஆகையால் எந்த படம் அதிக வசூல் பெற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் சூரியனை விட கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது சிம்பு உள்ளார்.