உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த போது அவரை ஹீரோவாகவே ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் சந்தானத்திற்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படி தொடர்ந்து காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பார்வையற்ற மனிதனாக சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் போகப் போக படத்தில் நடிப்பதை தற்போது உதயநிதி குறைத்துக் கொண்டு வருகிறார்.
இதற்கு காரணம் அரசியலில் உதயநிதி முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார். பிரச்சாரம், பொதுக்கூட்டம் என இதுலையே உதயநிதி படு பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிப்பதை காட்டிலும் தயாரிப்பதில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கணக்கு வழக்குகள் எல்லாம் சரியாக இருப்பதால் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் உதயநிதியை தான் நாடுகிறார்கள். மேலும் ஸ்டாலினின் கட்டளைக்கு இணங்க முழுவதுமாக உதயநிதி அரசியலில் செயல்பட உள்ளாராம்.
சமீபத்திய நேர்காணலில் உதயநிதி நான் இன்னும் இரண்டு படங்கள் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மாமன்னன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வடிவேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் உதயநிதி பேசுகையில் மாமன்னன் என்னுடைய கடைசிப் படமாக இருக்கும் என நினைத்தேன் ஆனால் கமல் சார் வற்புறுத்தியதால் அவரின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்காக இன்னும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதுவே எனது கடைசி படமாக இருக்கும் என உதயநிதி கூறி உள்ளார்.