லாஜிக் இல்லாத கதை, கதையை இல்லாத பிரம்மாண்டம்.. இந்தியன் 2 படத்துக்கு அமீர் கொடுத்த விமர்சனம்

Indian 2- Ameer: இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிய இந்தியன் 2 படத்தின் விமர்சனங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்தியன் 2 படத்தின் மீது இருந்ததால். அதிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் வாங்கிய சங்கர் இயக்குகிறார் என்றால் கதைக்கு ஏற்ற மாதிரி துணிச்சலுடன் தவறு செய்தவர்களை தோலுரித்துக் காட்டும் விதமாக இருக்கும்.

ஆனால் இந்தியன் 2 படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் நடிப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கதாபாத்திரத்தை தத்ரூபமாக கொடுக்கக்கூடிய கமல் இதில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயர் எடுக்கவில்லை. அத்துடன் இதில் எதிர்பார்த்த காட்சிகளும் பெரிசாக மக்களிடம் ரீச் ஆகவில்லை.

இந்தியன் 2 படத்திற்கு அமீர் கொடுத்த விமர்சனம்

அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியை எதிர்க்க முடியாததால் பல விஷயங்களை மூடி மறைத்து ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கதையை எடுத்த மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால் தான் இது சங்கர் படமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு காட்சிகள் இருக்கிறது. இப்படி இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கடைசியில் இந்தியன் 3க்கும் சில காட்சிகளை வைத்து லீடு கொடுத்திருக்கிறார்.

அதையும் பார்க்கும் பொழுது அந்த அளவிற்கு மக்களுக்கு ஈர்க்கவில்லை. முக்கியமாக இந்தியன் படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக இருந்தது ஏஆர் ரகுமான் இசை. ஆனால் இதில் இவருக்கு பதிலாக அனிருத் இசை அமைத்திருந்தாலும் இந்த படத்திற்கும் காட்சிக்கும் அது செட்டாகவில்லை என்று தோன்றுகிறது. இதனை தொடர்ந்து கமலின் கெட்டப்பை பார்க்கும் பொழுது ஒரு சீரியசான கேரக்டராகவே தெரியவில்லை.

இப்படி எதையுமே ஒத்துப் போகாத அளவிற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விஷயங்கள் இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் கொடுத்த விமர்சனம் என்னவென்றால் லாஜிக்கே இல்லாத கதை, கதையே இல்லாத பிரம்மாண்டம். கமல் என்னும் பிறவிக் கலைஞனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் மக்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே இந்தியன் 2 படம் ஒத்துப் போகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதில் வேற 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கு வரும் விமர்சனங்களை பார்த்தால் போட்ட காசை கூட எடுப்பாங்களா என்பது சந்தேகமாக தான் இருக்கிறது.

கடைசியாக கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் விமர்சனத்திற்கு அப்படியே எதிர் மாறாக இந்தியன் 2 படத்திற்கு கிடைத்திருக்கிறது. இப்படியே போனால் இனி கமலின் படங்கள் எந்தளவிற்கு மக்களிடம் ரீச் ஆகும் என்பது ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது.

இந்தியன் 2 மற்றும் 3 படத்தின் விமர்சனம்