அடுத்தடுத்து பிளாப்பாகும் படங்கள்.. கல்லா கட்ட நயன்தாரா போட்டிருக்கும் திட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருந்தார். திருமணத்திற்கு பிறகு எப்பேற்பட்ட நடிகையாக இருந்தாலும் அவரது மார்க்கெட் சரியும். ஆனால் நயன்தாரா விஷயத்தில் இப்படி நடக்காது என்று நினைத்த நிலையில் தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை தழுவி வருகிறது.

ஆனாலும் நயன்தாரா கைவசம் எக்கச்சக்க படங்கள் உள்ளது. வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி கனெக்ட் படம் வெளியாக உள்ளது. திகில் படமாக எடுக்கப்பட்டுள்ள கனெக்ட் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் இப்போது அவரது படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வருவதால் சற்று பயந்துள்ளார்.

இதனால் தற்போது புதிய திட்டம் ஒன்று திட்டி உள்ளார். அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்கள் தான் தயாரித்து வந்தனர். அதுமட்டுமின்றி நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஆனால் நயன்தாரா இப்போது பெரிய ஹீரோக்களின் படங்களை பிரம்மாண்டமாக தயாரிக்க யோசித்து வருகிறாராம். இதை மும்பையில் உள்ள பெரிய கம்பெனிகளின் உறுதுணையுடன் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். மேலும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

நயன்தாரா பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்தால் அதன் மூலம் பெத்த லாபம் பார்க்கலாம். இப்போதே கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா டாப் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் போது பல கோடிகள் லாபம் கிடைக்கும் என்ற யோசனையில் தான் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

முதற்கட்டமாக தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் யோசனையில் உள்ளாராம். இதனால் தற்போது நயன்தாரா நடிப்பில் காட்டும் தீவிரத்தை விட தயாரிப்பில் தான் அதிக தீவிரத்தை காட்டி வருகிறார். ஆகையால் ரவுடி பிக்சர்ஸும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக மாற உள்ளது.