திரிஷாவை தக்லைப் பட ப்ரொமோஷனில் சுகர் பேபி என்று அழைக்கிறார்கள். உண்மையில் சுகர் பேபி என்றால் என்ன, அதற்கு என்ன அர்த்தம் என்பதை மணிரத்தினம் இந்த படத்தில் ரகசியமாக வைத்திருக்கிறார். இப்பொழுது அந்த சுகர் பேபி கதாபாத்திரத்தை அலசி ஆராய தொடங்கி விட்டனர்.
ஹாலிவுட்டில் அழகான இளம் பெண்ணை சுகர் பேபி என்று அழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வயதான ஆண்களுடன் தவறான ரகசிய தொடர்பில் இருப்பார்கள். இப்படிப்பட்ட பெண்களை தான் சுகர் பேபி என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் திரிஷா கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கிறது.
தக்லைப் படத்தில் கமல் மற்றும் அபிராமி இருவரும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் அபிராமிக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. கமல், திரிஷாவுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசுவது போல் ட்ரைலரில் வருகிறது.
“மேடம், ஐ அம் யுவர் ஒன்லி ஆடம் என்று கமல் பேசும் வசனங்கள் இருக்கிறது. இதிலிருந்து வயதான கமலுக்கு திரிஷா சுகர் பேபி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை சிம்புவும், திரிஷாவும் காதலர்களாக இருந்திருக்கலாம் .
கமல், த்ரிஷாவிற்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பை வைத்து தான் கதை நகர்வதாக தெரிகிறது. இருவரும் த்ரிஷாவுக்காக அடித்துக் கொள்கிறார்கள். மணிரத்தினம் இதில் தான் அவருடைய சஸ்பென்சை வைத்திருக்கிறார். ஆனால் சுகர் பேபி என்று த்ரிஷாவை அழைப்பதில் ஏதோ ஒரு ரகசியம் அடங்கி இருக்கிறது.