Maniratnam, suhasini: வித்தியாசமான காதல் படங்கள் என்றால் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது இயக்குனர் மணிரத்தினம் தான். காதலை இவ்வளவு அழகாக ஒருவரால் சொல்ல முடியுமா என்று பல படங்களில் நம்மை பிரமிக்க செய்து இருக்கிறார். இப்படிப்பட்ட மணிரத்தினம் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்து கொண்டிருப்பார் என பலரும் நினைத்ததுண்டு.
ஏனென்றால் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி ஒரு நடிகை ஆவார். ஆகையால் அவருடைய படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்துள்ளது என பலர் கருதலாம். ஆனால் மணிரத்தினத்தின் ஒரு படத்தில் கூட சுஹாசினி நடித்ததில்லை.
அப்புறம் எப்படி இவர்களுக்குள் திருமணம் நடந்திருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழ வாய்ப்பு இருக்கிறது. அதாவது சுஹாசினி உலக நாயகன் கமலஹாசனின் அண்ணன் மகள். அதாவது அவருடைய அப்பா சாருஹாசன் இயக்குனர், நடிகர், தொலைக்காட்சி நடிகர் என பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார்.
மணிரத்தினம் மற்றும் சாருஹாசன் இடையே நல்ல உறவு இருந்து உள்ளது. இதன் காரணமாக சாருஹாசன் தான் தனது மகள் சுஹாசினியை திருமணம் செய்து கொள்கிறாயா என மணிரத்தினம் இடம் கேட்டு உள்ளார். அதன் பிறகு தான் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்ததாக சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
காதலில் நவரசத்தையும் ஊட்டும் மணிரத்தினத்தின் கல்யாணம் குடும்பத்தால் பார்த்து வைக்கப்பட்ட கல்யாணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் மணிரத்தினம் தனது மனைவி மீது அதீத அன்பு வைத்திருக்கிறார் என்பதை பல மேடைகளில் சுஹாசினி கூறியிருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார்.
மேலும் சுஹாசினி இனிவரும் காலங்களில் மணிரத்தினத்தின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை கூறியிருக்கிறார். மணிரத்தினம் பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக கமலை வைத்து புதிய படம் ஒன்று இயக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.