லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

Director Lokesh Kanagaraj: இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் பார்க்கப்படுகிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களை மட்டுமே லோகேஷ் இயக்கினாலும் எடுத்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் இந்திய அளவில் திரும்பிப் பார்க்கக் கூடிய இயக்குனராக இருக்கும் இவர் அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை ஆரம்பிக்கிறார்.

இந்த படத்திற்கு லோகேஷின் சம்பளம் 60 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் லோகேஷ் தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி வருகிறார். ஆனால் காப்பி அடித்து படம் எடுக்கும் அட்லி சர்வ சாதாரணமாக தற்பொழுது 60 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி தளபதியின் ஆஸ்த்தான இயக்குனராக இருந்த அட்லீ இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் உலக அளவில் வசூலில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது.

இவருடைய முதல் படமான ராஜா ராணி படமானது மோகன் நடிப்பில் வெளியான மௌன ராகம் படத்தின் அட்டகாப்பி என விமர்சிக்கப்பட்டாலும் அடுத்தடுத்த படங்களில் காப்பி அடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்ட அட்லீ, தற்போது பாலிவுட் வரை கலக்கி கொண்டு இருக்கிறார்.

இருப்பினும் இவர் எடுக்கும் படங்களில் மற்றொரு படத்தின் காப்பி கதை என்றே தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. இதுவும் ஒரு ஸ்மார்ட் வொர்க் தான். ஏனென்றால் அவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்த்த வசூலும் கிடைத்து விடுகிறது.

தற்போதைய சூழலுக்கு 60 கோடி சம்பளம் வாங்கும் அட்லீ ஒருவேளை ரஜினியை வைத்து படம் எடுக்கும் நேரத்தில் அதிலிருந்து சம்பளம் கூடுதலாக 100 கோடி வாங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மூளையை கசக்கி வேலை செய்யும் லோகேஷுக்கு அட்லீயை விட குறைந்த சம்பளம் கொடுத்து தலைவர் 171 படத்தில் சன் பிக்சர்ஸ் லாக் செய்திருக்கிறது.