Sun Picture: பாதுகாப்பை காரணம் காட்டி விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்வதாக நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் ஆகாது என்பதால் இதை வைத்து தளபதியை சீண்டிப் பார்க்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .இந்த படத்தின் வெற்றியின் மூலம் சன் பிக்சர்ஸ் தலைகால் புரியாமல் ஆடுகிறது.
அதிலும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆன கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி தான். அவரைத் தவிர வேறு யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது என உறுதியாகவும் சொன்னார். இவர் விஜய்யை தான் தாக்கி பேசினார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இப்பொழுது அரசியலில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் விஜய்க்கு ஓவர் அழுத்தம் கொடுக்கப்படுவதால் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை திடீரென்று ரத்து செய்துவிட்டார். இந்த செய்தி வெளியான உடனே சன் மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி கெத்து காட்டிய அலப்பறை என்ற வீடியோ பாடலை பதிவிட்டு விஜய்யை சீண்டி விட்டனர்.
இதற்கு தளபதி ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கொந்தளித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை டெலிட் செய்து சன் பிக்சர்ஸ் சைலன்ட் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் பதிவிட்ட பக்கத்தை காப்பி செய்து, சன் பிக்சர்ஸ் செய்த காரியம் இப்போது அம்பலப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவதால் தற்போது ஆளும் கட்சியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர் மீது காட்டமாக இருக்கிறார். அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் விஜய்யை சினிமாவில் இருந்து ஓரம் கட்டுவதற்கு மறைமுகமாக நிறைய வேலையை பார்க்கின்றனர். அவர்களது மனப்பான்மை என்ன என்பதை இப்போது போட்ட இந்த ட்விட்டர் பதிவிலேயே தெரிந்த விட்டது.
