Sun Pictures : லைக்கா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருவதால் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. லால் சலாம், விடாமுயற்சி என வசூலில் பெரிய அடி வாங்கிய படங்களை தயாரித்து இருந்தது.
ஆனால் சன் பிக்சர்ஸ் இப்போது கொடிக்கட்டி பறந்து வருகிறது. ஜெயிலர் படம் வசூலை வாரி கொடுத்த நிலையில் இப்போது ஆயிரம் கோடி பட்ஜெட்டை இறக்கி இருக்கிறது. தொடர்ந்து மாசாக மூன்று படங்கள் உருவாகி வருகிறது.
முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. கண்டிப்பாக கூலி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆயிரம் கோடி பட்ஜெட் முதலீடு செய்த சன் பிக்சர்ஸ்
அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் பாகம் பல கோடி லாபத்தை கொடுத்தது. இதனால் ரஜினி, அனிருத், நெல்சன் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கி இருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன்.
இப்போது சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக உருவாக இருக்கிறது அல்லு அர்ஜுனின் 22 ஆவது படம். அட்லியின் டைரக்ஷனில் உருவாகும் ஆறாவது படமான இது சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட உள்ளது.
இதன் பட்ஜெட் மட்டும் 600 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ வீடியோவை சன் பிச்சர்ஸ் வெளியிட்ட நிலையில் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.