லோகேஷ் கனகராஜை தாஜா பண்ணும் சன் பிக்சர்ஸ்.. மூட்டை மூட்டையாய் பணத்தை கொட்டி சுறாவுக்கு போடும் திட்டம்

சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் ஒரே பாட்டில் ஓஹோ என்ற ரேஞ்சுக்கு உயர்ந்து விடுவார். அப்படித்தான் இப்போது லோகேஷ் கனகராஜும் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு வந்துவிட்டார். தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் இவரை வளைத்து போடுவதற்கு தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அதில் சன் பிக்சர்ஸ் இவரை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே மூட்டை மூட்டையாய் பணத்தை கொட்டி கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் இவர்தான். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை பார்த்து மெர்சலாகிப் போன ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கு லோகேஷ் சம்மதித்திருக்கிறார். அதற்காக 40 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் லோகேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதாவது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு, அறிவு ஆகியோர் இயக்கும் படத்தில் தான் லோகேஷ், அனிருத் இருவரும் லீட் ரோலில் நடிக்கின்றனர். இது பெரும் ஆச்சரியத்தை கிளப்பிய நிலையில் சன் பிக்சர்ஸ் இதற்காக லோகேஷுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக பேசி இருக்கிறது. நம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அறிமுக நடிகருக்கு இவ்வளவு பணம் கொட்டிக் கொடுப்பது இதுவே முதல் முறை.

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் என்ற தங்க முட்டை போடும் வாத்து தான். இவரை வைத்து பல காரியங்களை சாமர்த்தியமாக செய்து கொள்வதற்கு சன் பிக்சர்ஸ் பிளான் போட்டிருக்கிறதாம். மேலும் தயாரிப்பாளர் இப்படி பணத்தை தண்ணியாக செலவழிப்பதற்கு முக்கிய காரணமே ரஜினி என்னும் சுறாவை வளைத்து போடத்தான்.

இப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்து இருக்கும் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படத்தை தயாரிப்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷை தாஜா செய்து கைக்குள்ளேயே வைக்க முடிவு செய்துள்ள சன் பிக்சர்ஸ் விரைவில் ஒரு சூப்பர் அறிவிப்பையும் வெளியிட இருக்கிறது.