ஒரே வாரத்தில் விஜய் டிவியை ஓரம்கட்டிய சன் டிவி.. நீங்க இப்போ தான் மாஸ், நான் அப்போ இருந்தே மாஸ்!

என்னதான் சன் டிவியில் நிகழ்ச்சிகள் சரியில்லை என கூறி வந்தாலும் வாரக்கடைசியில் அவர்களின் சேனல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கின்றன. மற்ற சேனல்கள் அவர்களுக்கு கீழ் தான்.

ஆனால் கடந்த சில மாதங்களாக அப்படி இல்லை. சன் டிவியை விட விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்தி மக்களை கவர்ந்து விட்டனர். இதன் காரணமாக சன் டிவி செய்த மாற்றங்கள் எதுவுமே பலிக்கவில்லை.

அது மட்டுமில்லாமல் மற்ற சேனல்களை காட்டிலும் சன் டிவி சீரியல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவறாமல் போனதே இத்தகைய சறுக்கலுக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் எந்த சேனலிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி புதிய மற்றும் பழைய சூப்பர் ஹிட் படங்களைத் தொடர்ந்து ஒளிபரப்பி தற்போது சன் டிவி மீண்டும் முதலிடத்தை பிடித்து விட்டது.

சீரியல் விஷயத்தில் வேண்டுமானால் சன் டிவி கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம். ஆனால் சினிமா விசயத்தில் எப்போதுமே சன் டிவிதான் டாப். அந்த காலத்திலிருந்தே பல சூப்பர் ஹிட் படங்களை வாங்கி கைவசம் வைத்துள்ளனர்.

ஆனால் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்ட படங்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி ரசிகர்களை சலிப்படைய வைத்து விட்டனர். அதற்கு உதாரணமாக கும்கி படத்தை சொல்லலாம்.