சினிமாவை விட சீரியலில் இவ்வளவு சம்பளமா.? சன் டிவி டாப் 5 நடிகைகளின் சம்பள லிஸ்ட்

Sun Tv Actress : சினிமாவில் ஒரு படத்திற்கு கோடியில் சம்பளம் நடிகைகள் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு படத்தையே எப்படியும் இரண்டு மூன்று வருடம் இழுத்தடித்து விடுகிறார்கள்.

சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஒரு எபிசோடு பெரும் தொகையை சம்பளமாக பெற்று வருகிறார்கள். அவ்வாறு சன் தொலைக்காட்சியில் டாப் 5 நடிகைகள் வாங்கும் சம்பள விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிங்க பெண்ணே மனிஷா மகேஷ்

சன் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் தான் சிங்க பெண்ணே. இத்தொடரில் மனிஷா மகேஷ் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு எபிசோடுக்கு 15,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது.

எதிர்நீச்சல் மதுமிதா

ரசிகர்களின் ஃபேவரட் தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தான் எதிர்நீச்சல். இத்தொடரில் நான்கு மருமகள்கள் உள்ள நிலையில் கடைக்குட்டி மருமகளாக மதுமிதா ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் 18,000 என்று கூறப்படுகிறது.

இனியாவாக ஆலியா மானசா

விஜய் டிவி மூலம் சீரியலில் நுழைந்தாலும் இப்போது சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆலியா மானசா. இந்தத் தொடரில் ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 20,000 வரை ஆலியா மானசாவுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கயலாக சைத்ரா ரெட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் பிரபலமானவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் ஒரு எபிசோடுக்கு 25 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது.

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்தத் தொடரில் துணிச்சலான சுந்தரி கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்து வருகிறார். இவர் சன் டிவி நடிகைகளிலேயே ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார்.