அஞ்சே மாசத்துல அறுவடை முடிச்ச சுந்தர் சி.. நமக்கு நம்ம ரூட் தான் சரி என உடைச்ச பூசணிக்கா

Sundar C: கலகலப்பான மசாலா படங்களுக்கு பேர் போனவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் இவருக்கு சில வருடங்களாக சினிமாவில் எல்லாமே சருக்கல்களாகத்தான் அமைந்து வருகிறது. அவர் பழைய டெக்னிக்கில் நிறைய நட்சத்திரங்களை வைத்து எடுத்த காமெடி படங்களும் அவருக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. ஹிட் படமான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கூட ரிலீஸ் செய்தார். ஆனால் அதுவும் மண்ணை கவ்வியது.

சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீஸ் ஆன காபி வித் காதல் திரைப்படமும் பிளாப் ஆனது. தொடர் தோல்விகளை கொடுத்து வருவதால் இவருடைய படங்களில் நடிக்க இளம் ஹீரோக்கள் தயாராக இல்லை. இவரால் வளர்த்து விடப்பட்ட ஹீரோக்கள் கூட தற்போது இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு சுந்தர் சி யின் மார்க்கெட் மொத்தமாக சரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற இயக்குனர்களைப் போல வரலாற்றுப் படம் ஒன்றை எடுத்து விடலாம் என திட்டமிட்டு இருந்தார் சுந்தர் சி. சங்கமித்ரா என பெயரிடப்பட்ட இந்த படம் விரைவில் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இந்த படமும் அவருக்கு கை கூடவில்லை. இதனால் தற்காலிகமாக சங்கமித்ரா படத்தை தொடங்காமல் விட்டுவிட்டார் இவர்.

தான் முதன் முதலில் கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட் அடித்த தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் படம் வந்த இடம் தெரியாமல், ரிலீசான தடமும் இல்லாமல் போய்விட்டது. இது இயக்குனர் சுந்தர் சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துவிட்டது.

இனி மனிதர்களை நம்பினால் பிரயோஜனம் இல்லை என முடிவெடுத்த சுந்தர் சி, பேய்களை நம்பி தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை நகர்த்தி இருக்கிறார். அரண்மனை சீரிஸ் ஓரளவுக்கு இவருக்கு கை கொடுத்து இருக்கிறது. அதை நம்பி தற்போது நான்காம் பாகத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார். இந்த ரூட் தான் தனக்கு செட் ஆகும் என முடிவெடுத்துவிட்டார் சுந்தர் சி.

படத்தின் படப்பிடிப்பு வேலைகளை கடந்த பிப்ரவரி மாதம் தான் தொடங்கி இருந்தார் இயக்குனர். ஐந்தே மாதத்திற்குள் எல்லா வேலைகளும் முடிக்கப்பட்டு அரண்மனை 4 தற்போது பூசணிக்காய் உடைத்து முடிவடையும் நிலையில் இருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் சுந்தர் சி இந்த படத்தை தான் வெற்றியின் அஸ்திவாரமாக நம்பி இருக்கிறார்.