இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த வெற்றி படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு விட்டது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இதனால் இயக்குனர் தரப்பிலாக இருக்கட்டும், தயாரிப்பாளர்கள் தரப்பிலாக இருக்கட்டும் போட்ட முதலீடை மொத்தமாக எடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இப்படி பார்த்து பார்த்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படக்குழு மொத்தமாய் கலங்கும்படி ஒரு தகவல் வெளியானது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை வரும் ஏப்ரல் ஆறாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
என்னதான் பொன்னியின் செல்வனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மார்க்கெட்டை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, பொன்னியின் செல்வன் படம் அடி வாங்கி விடுமோ என்று பயந்த இயக்குனர் மணிரத்னம் படத்தின் வெற்றிக்காக தலைவரிடம் கெஞ்சி கூத்தாடி, கடைசியில் சரண்டர் ஆகி விட்டார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மணிரத்னம் கேட்டுக் கொண்டதற்காக, அவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரம் எந்த விதத்திலும் பாதிக்காத அளவுக்கு படக்குழுவுடன் பேசி ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்து விட்டார்.
இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக போவதில்லை. இப்பொழுது மணிரத்னம் ரொம்பவே தைரியமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்கிறார். மணிரத்னம் கேட்டுக் கொண்டதற்காக ரஜினிகாந்த் தன்னுடைய பட ரிலீசை ஒத்தி வைத்திருப்பது அவருடைய பெரிய மனசை தான் காட்டுகிறது.