வாலிபத்தில் முறுக்கு குறையாமல் ரஜினி செய்த அடாவடிகள்.. 4 முறை தப்பித்த சிறைவாசம்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீகம், அமைதி, இமயமலை என ஒரு அகிம்சாவாதியாக வாழ்ந்தாலும், அவருடைய வாலிப காலத்தில் செய்யாத ரவுடிசமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் இருந்தார். தனக்கு தப்பு என தெரிந்தால் யாரிடமும் சண்டை போட கூட இவர் தயங்க மாட்டார். ரொம்பவும் முன் கோபகாரராகவும் இருந்திருக்கிறார். அப்படி இவர் வாலிப முறுக்கில் செய்த சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.

அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிக்கை என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு ரிப்போர்ட்டர் எழுதி வந்திருக்கிறார். இவர் தொடர்ந்து ரஜினியை பற்றி ஒரு சில செய்திகளை எழுதுவதை பார்த்து கடுப்பான ரஜினி அவரை சென்னையில் ஒரு ரோட்டில் பார்த்த பொழுது தன்னுடைய காரை வைத்து இடித்து கொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

அதேபோன்று சென்னையில் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்த பொழுது ரஜினிக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம். இதனால் அவர் பயங்கரமாக டென்ஷன் ஆகி இருக்கிறார் . எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்தத் தியேட்டரின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கி பயங்கரமாக ரவுடிசம் செய்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வீட்டில் இருந்த பொழுது ஒருமுறை சென்னை ஏர்போர்ட்டில் இருந்த அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டு, பெல்ட்டை கழட்டி சண்டை போடும் அளவிற்கு இறங்கி விட்டார். இந்த சம்பவம் அப்போதைய நாளிதழ்களில் ரஜினிகாந்த் திடீர் கைது என அவருடைய புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் அடிக்கடி தன்னுடைய அண்ணனை பார்ப்பதற்காக கர்நாடகாவிற்கு செல்வது உண்டு. அப்போது தன்னுடைய அண்ணன் நாராயண ராவை அடித்த மிகப்பெரிய ரவுடியுடன் பயங்கர சண்டை இட்டு பிரச்சனை செய்திருக்கிறார். இந்த சம்பவமும் அப்போதைய காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

ரஜினி தன்னுடைய இளமைக் காலங்களில் அவர் செய்த நிறைய விஷயங்களை பற்றி தற்போது ரசிகர்களிடம் ரொம்பவும் வெளிப்படையாக பேசி வருகிறார். தன்னை போல் ஒரு சில விஷயங்களை செய்யாமல் இருப்பதற்கும் அறிவுரை சொல்லி வரும் ரஜினிகாந்தின் அன்றைய காலகட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்களை சொல்லி ஊக்கப்படுத்தியும் வருகிறார்.