சூப்பர் ஸ்டார் காதுக்கு போன விஷயம்.. ஜெயிலர் படத்தால் பரிதவிக்கும் நெல்சன்

இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் தற்போது சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் சிவராஜ்குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பதை ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் உறுதி செய்தது.

இந்நிலையில் நெல்சனுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திற்கு முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.

அதுமட்டும்இன்றி ரஜினி பட வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்காது என்றும் பலரும் கூறிவந்தனர். ஆனால் நெல்சன் கதையில் சில மாற்றங்கள் செய்து ரஜினி அவருக்கு வாய்ப்பை வழங்கினார். இதனால் தற்போது நெல்சன் இரவு, பகல் பாராமல் ஜெயிலர் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். அதிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குகிறாராம்.

இவ்வாறு உணவு, உறக்கம் இன்றி ஜெயிலர் படவேளையில் நெல்சன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்த விஷயம் எப்படியோ சூப்பர் ஸ்டார் காதுக்கு சென்று விட்டது. இதனால் நெல்சனை அழைத்து ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஜெயிக்கும், அதுவே தோல்வி படமாக இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.

என்னை பொறுத்தவரையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆகையால் உனக்கான ஓய்வை நீ சரியாக எடுத்துக்கொள் என்று நெல்சனுக்கு ரஜினி சில அறிவுரைகளை கூறியுள்ளார். ஆனாலும் பீஸ்ட் படத்தில் சொதப்பியது போல் ரஜினி படத்தில் எந்த ஒரு தவறும் செய்யக்கூடாது என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நெல்சன் செய்து வருகிறாராம்.

ஆகையால் நெல்சன் போட்ட உழைப்புக்காவது கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என ஜெயிலர் படக்குழுவினர் கூறி வருகிறார்கள். இந்த படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் மிக விரைவில் ஜெயிலர் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் யார் நடிக்கிறார்கள் என்பது விரைவில் பெரிய வரும்.