ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு சிம்பு(simbu) ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் மாநாடு. இந்த படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தான் உருவானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் மொத்தமும் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து டப்பிங் பணிகளையும் முடித்து விட்டனர்.
முன்னதாக ரம்ஜான் பண்டிகைக்கு மாநாடு படத்தை வெளியிட இருந்த படக்குழுவினர் இடையில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் தடுமாறி வருகின்றனர். ஒரு சில கூட்டணிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் சிம்பு, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் படங்களில் பாடல்களை கேட்கவே பல ரசிகர்கள் தவம் கிடக்கின்றன. அந்த வெற்றி கூட்டணி மீண்டும் மாநாடு படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததும் தான் படத்தில் உடன் நடித்த நடிகர்களுக்கு நன்றி சொல்கிற வகையில் மாநாடு படம் எப்படிப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.
மாநாடு படம் மாஸ் கலந்த திரில்லர் அம்சமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிம்புவின் சினிமா கேரியரில் இந்த படம் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனவும் படத்தைப் பற்றி பெருமையாக பேசிவருகிறார்.
மேலும் அரசியல் அடிப்படையில் உருவான மற்ற படங்களிலிருந்து இந்தப் படம் முழுவதும் வேறுபட்டிருக்கும் எனவும், இந்திய சினிமாவுக்கு இது புதுமையான கதைக்களம் எனவும் குறிப்பிட்டு படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
