சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பானது இன்று துவங்கியது. பெயரிடப்படாத இந்த படம் தற்போதைக்கு சூர்யா 42 என குறிப்பிடப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம் இதுவாகும்.
UV கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படம் மிக அதிக பட்ஜெட்டில், பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. 10 மொழிகளில் இந்த படத்தை வெளியிட இருக்கிறார்கள். இது சூர்யாக்கு முதலில் வெளியாக இருக்கும் பான் இந்தியா படமாக இருக்கும்.
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இபோது சூர்யாவின் 42 வது படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், அண்ணாத்தே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது சூர்யா-சிவா கூட்டணியில் முதல் முறை படம் உருவாகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். இந்த படம் திஷாவுக்கு முதல் நேரடி தமிழ் திரைப்படம் ஆகும். லொஃப்ர் திரைப்படத்தை அடுத்து திஷா நடிக்கும் 3வது தென்னிந்திய திரைப்படம் ஆகும்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா பட வெற்றிக்கு பிறகு DSP சூர்யாவின் 42 வது படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே சூர்யாவின் சிங்கம் திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்..
சூர்யா 42, 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருக்கிறது.