Actor Surya: பொதுவாக ஒரு படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் இருந்தாலே ஹீரோக்கள் திணறி விடுவார்கள். ஆனால் ஒரே படத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு ஒரு நடிகர் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இப்படி நடித்தால் கண்டிப்பாக கிசுகிசுவில் சிக்குவார்கள்.
ஆனால் பெரிய இடத்து வாரிசாக இருந்து சினிமாவில் நுழைந்தாலும் அவர் ஒரு கிசுகிசுக்களில் கூட சிக்கியது கிடையாது. மேலும் வில்லனாக ஆரம்பத்தில் படங்களில் அறிமுகமான அவர் தனது திறமையால் அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியில் கெட்ட நேரத்தால் ஹீரோ பட வாய்ப் இழந்தார்.
அதாவது சூர்யாவின் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் ஜீவன். இவருடைய சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் தான் நான் அவன் இல்லை. இந்த படத்தில் ஜீவனுக்கு கதாநாயகியாக சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா ஆகிய 5 நடிகைகள் நடித்திருந்தார்கள்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதன்பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த ஜீவன் அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பிவிட்டார். தொடர் தோல்வியால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பிறக்கும்போதே செல்வந்தர் வீட்டில் பிறந்த அவர் சில கெட்ட பழக்கத்தால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் ஜீவன் சினிமாவில் இருந்த வரைக்கும் எந்த ஒரு நடிகைவுடனும் கிசுகிசுக்கப்படவில்லை. ஐந்து நடிகைகள் உடன் நடித்தாலும் தனது லிமிட்டை மீறி நடந்து கொள்ள மாட்டாராம்.
அதோடு மட்டுமின்றி திருமணத்தின் மீதும் ஈடுபாடு இல்லாத காரணத்தினால் தற்போது வரை சிங்கிளாகவே ஜீவன் இருந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் காக்க காக்க படத்தை போல் ஒரு தரமான வில்லன் கதாபாத்திரத்தில் ஜீவன் என்ட்ரி கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.