அவருக்கு படமே எடுக்கத் தெரியாதுன்னு அறிக்கை விட்ட சூர்யா.. வாழ வைத்தவரை மார்பில் மிதித்த சிங்கம்

Actor Suriya: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக இருக்கும் சூர்யா, படிப்படியாக முன்னேறி இப்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரை தூக்கிவிட்டு அழகு பார்த்த இயக்குநரையே, சூர்யா ஏறி மிதித்து விட்டார்.

கோலிவுட்டில் முக்கியமான காதல் படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இப்போது அவர் டாப் நடிகர்களின் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இருப்பினும் இவருக்கு இப்போதைக்கு நேரம் சரியில்லை.

ஏனென்றால் தொடர்ந்து போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு, அந்த படத்திற்காக கடன்களை மட்டும் வாங்கி குவித்து கொண்டிருக்கிறார். உருப்படியா ஒரு நடிகரை வைத்து படம் எடுத்த பாடில்லை, அதிலும் நான்கு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை இன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்.

அறிக்கை விட்ட சூர்யா

ஆனால் அந்தப் படம் பைனான்சியர் பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தடைப்பட்டு நிற்கிறது. மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற ரொமான்டிக் படங்களை கொடுத்த கௌதம் மேனனுக்கு இப்படி ஒரு நிலைமையா என எல்லோரும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் ஒரு பேட்டியில், கௌதம் மேனனுக்கு படமே எடுக்கத் தெரியாது என்று சூர்யா கூறிவிட்டார்.

அவரை வளர்த்து விட்டதே கௌதம் மேனன் தான். ஆனால் ரொமான்டிக் இயக்குனர் கௌதம் மேனனுக்கு கதை சொல்லவே தெரியாது என்று சூர்யா ஒரு அறிக்கை விட்டார். ஆனால் கௌதம் மேனன் சூர்யாவை வைத்து எடுத்த காக்க காக்க படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் சினிமா கேரியர் உச்சித்திற்கு சென்றது. இதனால் அவருடைய லைப் மாறியது என்றே சொல்லலாம்.

மேலும் சூர்யா- ஜோதிகாவின் திருமணத்தை நடத்தி வைத்ததே கௌதம் மேனன் தான். இப்படி சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் சூர்யாவை வாழ வைத்த இயக்குனர் கௌதம் மேனனுக்கு படமே எடுக்க தெரியாது என சொன்னது, தூக்கி வளர்த்தவங்க மார்பில் எட்டி உதைப்பதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.