சினிமாவில் திறமை இருந்தும் சில நடிகர், நடிகைகளால் ஜொலிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கக்கூடும். இது குறித்து சிம்பு பட நடிகை மனவேதனையுடன் பேசி உள்ளார். அவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே தொடர் தோல்வியை கொடுத்துள்ளது.
இதனால் உச்சகட்ட வேதனை அடைந்த அவர் தனது மனதில் உள்ள விஷயங்களை போட்டு உடைத்துள்ளார். அதாவது சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் உதயநிதியின் கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு நிதி அகர்வால் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது சினிமாவில் திறமை இருந்தாலும் 90% அதிர்ஷ்டம் தேவை என்று கூறியுள்ளார். ஏனென்றால் சினிமா துறையில் நேர்மையாக செல்ல வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் மிக முக்கியம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் கூறியுள்ளார்.
அதாவது சாதாரணமாக நாம் கதையைக் கேட்கும் போது நமக்கு மிகவும் பிடித்த போகும். ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது வேறு மாதிரி அமைந்து விடும். சில சமயங்களில் பேப்பரில் சுமாராக இருக்கும் கதைகள் திரையில் பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்கும். இதற்குக் காரணம் அதிர்ஷ்டம் தான்.
நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நிலைக்கு நான் வந்து விட்டதாக நினைக்கவில்லை என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் அல்லது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு.
கண்டிப்பாக அது போன்ற படங்கள் வரும் காலங்களில் வரும் என்று நம்புவதாக நிதி அகர்வால் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்தாலும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் வியாபார ரீதியாக நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.